தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் - எதிர்த்து சென்னையில் போராட்டம்
AD
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புள்ளை என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
இதில், மாநில செயலாளர் அபுபைசர், துணை பொதுச் செயலாளர் செய்யது இக்பால், பொருளாளர் அபுபக்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எடுத்து வந்து, நடு வீதியில் வைத்து தீ வைத்து எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.
பின்னர் பதாகையில் பொறிக்கப்பட்டு இருந்த இலங்கை தேசிய கொடியின் மீது செருப்பை வீசி கோஷம் போட்டுக்கொண்டு இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


அஸ்ஸலாமு அழைக்கும் .
ReplyDeleteதவ்ஹித்வாதிகளே ,போராட்டம் நடத்தினது சரி .நெருப்பைக் கொண்டு தண்டனை கொடுப்பது அல்லாஹ் உடைய வேலை .உங்களுக்கு யார் இந்த உரிமையை தந்தது .மிக மிக வெட்ககேடான செயல் .அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு
தேடிக்கொள்ளுங்கள் .ஜசக்கல்லாஹ் .
Daoud Tharik
இந்த போராட்டம் இலங்கை முஸ்லீம்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் ஆக்க பூர்வமான முடிவு எடுக்கப்படுவதை
ReplyDeleteதூண்டும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. மாறாக புலி சார்பு சக்திகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமது வக்கிரத்தை தீர்த்துக் கொண்டதே
நடைபெற்றுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் உருவபொம்மை எரிப்பும், இலங்கை தேசியக் கொடியை செருப்பால் அடித்ததும் இலங்கை முஸ்லீம்களுக்கு எவ்வகையிலும் நன்மை பயக்கப் போவதில்லை.
இலங்கை முஸ்லீம்கள் இதனை அனுமதிக்கப் போவதுமில்லை. ஆக புலி சார்பு சக்திகள் தம்புள்ளை பெயரைப் பயன்படுத்திக் கொண்டு தமது வக்கிரங்களை தீர்த்துக் கொண்டுள்ளன.
Daoud Tharik அவர்களே, இதனை கருத்தில் கொள்ளவும்:
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது, பாலியல் மற்றும் நிதிமோசடிக் குற்றச் சாட்டின் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அமைப்பிலிருந்து நீக்கப் பட்ட பாக்கர் (இவர் மவ்லவி கிடையாது) என்பவருடைய தனிப்பட்ட அமைப்பு. பெயரில் தவ்ஹீத் என்று
போட்டிக்காக வைத்துள்ளார்களே தவிர, இஸ்லாத்துக்கும் இவர்களுக்கும் காத தூரம். இந்த போராட்டத்தில் தனது கட்சி கலந்து கொள்ளும் என
புலி ஆதரவாளன் வை கோ அறிவித்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் P ஜெய்னுலாப்தீன் புலிகள் விடயத்தில் கடும் எதிர்ப்பு நிலைப்பாட்டில்
உள்ளதால்,அவர்களை எதிர்ப்பதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புலி சார்பு சக்திகளை ஆதரிக்க தலைப்பட்டுள்ளது.
நெருப்பினால் தண்டிப்பது மட்டுமல்ல, உருவப் பொம்மைகள் செய்வதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அப்போ இதில் பங்குபற்றிய எவனுமே உண்மையான வாப்பா உம்மவுக்கு பிறக்க வில்லையா? எல்லாமே சோதாப்பயபுள்ளகள்தானா?
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteபரதேசி பாக்கருடைய ஜமாத் என்று தெரியாமல் அவசரத்தில் எழுதி விட்டேன் .
Daoud Tharik.
assalamualaikkum dear all nalla nokkaththukkaha porattam nadathi irukkanga parattalam athukkaha avarhalathu ella kaariyamum sri enru solla mudiyathu thesiya kody& janathipathi uruvam erippu nallathalla ethanall muslimgalum thuvesa kadayarhalukku samamanavarhal enru solvarhal nam amaithiyaha islam kattiya valiyel emathu porattangalai naththanum athu matravarhalukku padamaha irukkanum
ReplyDelete