Header Ads



மு.கா. உயர்பீட கூட்டத்தில் காரசார விவாதம் - கிழக்கு தேர்தலில் தனித்து போட்டியிட தயார்..?



தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடங்கிடையாதென தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அந்தப் பள்ளியை அவ்விடத்திலிருந்து அகற்ற எந்த சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் கூட்டம் சனிக்கிழமை கட்சி தலைமையகத்தில் கூடியபோது அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் காரசாரமாக விவாதித்தனர்.

இங்கு உரையாற்றிய ரவூப் ஹக்கீம் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டினால் அரசுடனான எமது உறவில் மாற்றமேற்படலாம். ஜனாதிபதி இதில் நீதியான தீர்மானத்தை வழங்குவாரென நாம் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அத்துடன் இந்த விடயத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது.

இந்நிலையில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முஸ்லிம்களின் இருப்புக்கான பிரச்சினையாக மாறியுள்ளது. அதனை நாங்கள் விட்டுக்கொடுக்க எந்த விதத்திலும் தயாராக இல்லை.

இதேவேளை எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு எம்மைத் தயார்படுத்தி வருகின்றோம். இதில் தனித்து போட்டியிடவே எண்ணியுள்ளோம். அரசடன் இணைந்து போட்டியிடும் நிலைமை வந்தால் அதற்கு நிபந்தனையுடனே செயற்படுவோம். அவ்வாறு நிபந்தனையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தனித்து போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை அதிகாரத்தை நாம் கைப்பற்றுவோம்.

இதேவேளை ஒரு சிங்கள வார பத்திரிகையொன்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதாகக் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நாம் தற்போது வேறு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேச வேண்டிய அவசியம் கிடையாதென்றார்.

1 comment:

  1. Dear Minister
    You always do business with political,see where you can lot money
    for this election as usual you do,
    Good luck.

    ReplyDelete

Powered by Blogger.