Header Ads



ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தலைவிரித்தாடும் தமிழ் இனவாதம்

ஐ.நா. மனித உரிமை பேரவையில்  இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க  அரபு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் இலங்கை அரசிற்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடிப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை கொழும்பில் நடைபெற உள்ள கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு கம்பன் விழா ஏற்பாட்டுக்குழுவினர் அழைத்திருப்பதை கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரவூப் ஹக்கீமை அழைத்த கம்பதாசர்களுக்கு குறிப்பாக கம்பவாரி ஜெயாஜ் அவர்களுக்கு சூடு, சொரணை இல்லாமல் இருக்கலாம் ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல. போரில் தமிழர்கள் கொல்லப்படவில்லை, தமிழிச்சிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படவில்லை, கிழக்கில் உதயம், வடக்கில் வசந்தம், தமிழர்கள் பத்துவித கறியோடு பால்சோறு சாப்பிட்டு பாலும் பழமும் அருந்தி பன்னீரில் கொப்பளித்து பஞ்சணை மெத்தையில் படுத்து உறங்குகிறார்கள்.

சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறார்கள், இன்பமே ஒழிய துன்பம் இல்லை எல்லோரும் சிங்கள இராணுவ ஆட்சியில் மாலோகமாக வாழ்கிறார்கள் என்று இலங்கை செய்யும் பரப்புரைக்கு  கம்பன் கழகமும் கம்பதாசர்களும் துணை போகிறார்கள்.

கம்பர் எழுதிய இராமாயணம் ஆகும் நூலா ஆகாத நூலா என்பது பற்றி நடந்த விவாதங்களில் கம்பர் கல்வியில் பெரும் புலவர் அவர் எழுதிய காப்பியம் இலக்கிய நயம் படைத்தது எனினும்  மொத்தத்தில் அந்தக் காப்பியம்  மரத்தின் பின் ஒளித்திருந்து அம்புவிட்டு வாலியைக் கொன்ற இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிப்பதையும் இலங்கையை ஆண்ட மறத்தமிழன் அய்யிரண்டு திசைமுகத்தும்  தன்புகழை வைத்தவனை இரக்கமில்லாத அரக்கன் எனத் தூற்றுவதையும்  தன்மானத் தமிழர்கள்  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வால்மீகி  ‘சீதையைப் பிரிந்த சோகத்தால் மது, மாமிசம் அருந்துவதை விட்டுவிட்டார். வானப்பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்குகளையே சாயங்காலத்தில் புசிக்கிறார்’ என இராமனை ஒரு குடிகாரனாகச் சித்திரிக்கிறது.

மேலும்  கம்பரது இராமகாதையில்  காணப்படும் காமரசம் ததும்பும்  பாடல்கள் அதன் தெய்வீகத்தை கேள்விக் குறியாக்குகிறது. அதன் காரணமாகவே கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களைத் தீக்கிரையாக்க வேண்டுமென அறிஞர் அண்ணா வாதிட்டார். தெய்வமாக் கதையில் காமரசம்  வேண்டுமா என்று கேட்டார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பேரணி, உண்ணாநோன்பு, நடைபயணம் என ஆர்ப்பரித்து எழுந்தார்கள்.

அதே தீர்மானத்தை  சிங்கள ஆட்சியாளர்களோடு கைகோர்த்து எதிர்த்துப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவது முழுத் தமிழினத்தையும் அவமதிப்பதாகும். எனவே தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கம்பதாசர்களால் நடத்தப்படும் இந்தக் கம்பன் விழாவைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள்  அனைவரரையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

1 comment:

  1. கம்பன் விழாவில் அமைச்சர் ரவூப் ரக்கீமை கலந்து கொள்ளக் கூடாது என அறிக்கை விடுவதற்கு, கனடா அரசு உதவிப் பணத்தில் வாழும் புலன்கள் பெயர்ந்த கூட்டத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.

    மூவினமும் அமைதியாக வாழும் இலங்கையில், யாரும் இப்படிப்பட்ட அறிக்கைகளைக் கண்டு கொள்வதில்லை.

    அண்மையில், கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செல்வநாயகத்தின் நினைவு தினத்தில் பத்து பேரிற்குமேல் யாரும் சமூகமளிக்கவில்லையாம்.

    புலிக் கேடிகள் ஏற்பாடு செய்திருந்தபடியால், யார் வரப்போகிறார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.