இன்றைய நில நடுக்கத்தை அறிந்துகொண்ட பறவைகள்
இன்று புதன்கிழமை இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பின்னர் சுனாமி அபாயம் நீங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
பொதுவாக இயற்கை அசம்பாவிதங்கள் அனைத்தும் முன்கூட்டியே பிற உயிரிழனங்களுக்குத் தெரிந்து விடும் என்ற விஷயத்தை நிரூபிக்கும் வகையில், கடற்கரைப் பகுதியில் வாழும் பறவைகள் பலவும் நில அதிர்வு நிகழும் போது வானத்தில் பறக்காமல் தரையிலேயே வெகு நேரம் இருந்ததாக பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment