தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் பௌத்தத்திற்கு எதிரானது - கருணாநிதியும் கண்டிக்கிறார்
இலங்கையில் மசூதியை இடித்து நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி:- இலங்கையில் மசூதி இடிப்பு பிரச்சினை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
பதில்:-இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளை என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு, 2000-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது.
தென்னிலங்கையில் தம்புள்ளை என்ற இடத்தில் இருந்த மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று வேறொரு செய்தி தெரிவிக்கின்றது, இந்த மத வெறியை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர்.
தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை. மசூதிகளாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் - அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர்! இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வயதான காலத்தில் பேரப்பிள்ளைகளுடன் ஓய்வு எடுப்பதுதானே .உங்களுக்கு அறிக்கை விடுவதே பொழுது போக்காகி
ReplyDeleteவிட்டது .முதலில் கோவையில் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயத்திற்கு பாவ மன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள் .
அத்துடன் குடும்ப போரை நிறுத்தி தமிழ் நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் .நன்றி ஐயா.