Header Ads



வேலுப்பிள்ளை பிரபாகரன் கைது செய்யப்பட்டாரா..?

ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வருவதன் மூலம் அரசை எவரும் எதுவும்செய்ய  முடியாது என்று வெளிவிவகார ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பனருமான சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜெனிவா தீர்மானம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர்,

“வெளிநாட்டு சக்திகள் தமது பிரச்சினையை தீர்க்கும் என்ற கற்பனையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியே வரவேண்டும். போரின் இறுதியில் சரணடைந்தவர்களின் விபரங்கள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டினார்.

ஆனால்,கைது செய்யப்பட்ட, சரணடைந்தவர்களின் விபரங்களை தீவிரவாத தடுப்புப்பிரிவு வைத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் தமக்குத் தேவையானவர்கள் இல்லை என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்க மறுக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அந்தப் பட்டியலில் இருக்க வேண்டும் என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் எதிர்பார்க்கிறார்.

பொறுப்புக்கூறலுக்கு முகம் கொடுக்குமாறு அரசை அவர் கோருகிறார். அவ்வாறாயின் விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குப் பொறுப்புக்கூறும் சமமான கடப்பாடு அவர்களுக்கும் உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிற்குறிப்பு - பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி இறுதியாக வெளியிட்ட வீடியோ காட்சியில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற வார்த்தைக்கு பதிலாக படுகொலை செய்யப்பட்டார் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளமையும், பிரபாகரனில் சடலத்தை நோக்குகையில் அவரது பின்தலை கோடாரியினால் கொத்தப்பட்டமைக்கான பெரிய காயம் ஒன்று காணப்படுவதையும் காணமுடிகிறது.

No comments

Powered by Blogger.