Header Ads



பாகிஸ்தானில் 6 கால்களுடன் அதிசய குழந்தை - உயிரை காப்பாற்ற தந்தை வேண்டுகோள்



பாகிஸ்தானில் 6 கால்களுடன் அதிசயக் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சுக்குரில் பிறந்த இந்த குழந்தை தற்போது கராச்சியில் உள்ள தேசிய குழந்தைகள் சுகாதார நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்வது குறித்து டாக்டர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்த குழந்தையின் தந்தை பெயர் இம்ரான் அலி ஷேக்(31). இவர் எக்ஸ்ரே டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அப்ஷான் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த குழந்தை இவர்களின் முதல் குழந்தையாகும்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், மனைவியின் அறுவை சிகிச்சைக்கே சேமிப்பு அனைத்தையும் செலவழித்து விட்டதாகவும் டாக்டர்கள்தான் தனது மகனின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



No comments

Powered by Blogger.