முஸ்லிம் ஊடகவியலாளர்க்கு ''புலிட்ஸர் விருது'' கிடைத்தது
அமெரிக்க ஊடக துறையில் மிகச்சிறந்த பத்திரிகை பணிகளுக்காக வழங்கப்படுவதுதான் புலிட்ஸர் விருது. இவ்வாண்டிற்கான புலிட்ஸர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அசோசியேட் ப்ரான்ஸ் ப்ரஸ் போட்டோ கிராபர் மசூத் ஹுஸைனிக்கு ப்ரேக்கிங் நியூஸ் போட்டோக்ராபிக்கான விருது கிடைத்துள்ளது.காபூலில் நெரிசல் மிகுந்த தர்கா பகுதியில் தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து பலர் இறந்து கிடக்கும் வேளையில் 12 வயது சிறுமி தரான அக்பரி சப்தமிட்டு அழும் காட்சிக்கு புலிட்ஸர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹுஸைனி ஆப்கானிஸ்தானை சார்ந்த போட்டோ க்ராபர் ஆவார். இதுக்குறித்து மசூத் ஹுஸைனி கூறுகையில், ‘முதன் முதலாக ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவருக்கு இவ்விருது கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. யார் இந்த போட்டோவை பார்த்தாலும் போட்டோக்ராபர் பற்றித்தான் நினைப்பார்கள். ஆனால், நான் நம்புவது என்னவெனில் இந்த போட்டோவை பார்க்கும் பொழுது ஆப்கான் மக்களின் வாழ்க்கையின் வலியை அவர்கள் மறக்கமாட்டார்கள் என்பதே’ என்று ஹுஸைனி தெரிவித்தார்.


Post a Comment