Header Ads



ரூபாவின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 125.65 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு நேற்று 128 ரூபாவாக அதிகரித்தது.

அது மேலும் வீழ்ச்சியடைந்து, நேற்று முற்பகல் ஒரு அமெரிக்க டொலர் 130 ரூபாவாக விற்கப்பட்டது. கடந்த மார்ச் 19ஆம் திகதி இலங்கை ரூபாவின் மதிப்புக் கடுமையாக வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் ஒன்று 131.60 ரூபாவாக விற்கப்பட்டது. இதையடுத்து அரசு நாணயப் பெறுமதி வீழ்ச்சியைத் தடுக்க முனைந்தது.

இந்தநிலையில் கடந்தவாரம் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 125 ஆக உயர்ந்தது. எனினும் இந்தவாரம் ரூபாவின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
 







No comments

Powered by Blogger.