Header Ads



தாயின் சடலத்துடன் 5 நாட்கள் சொக்கலேட் சாப்பிட்டு உயிர்வாழ்ந்த 2 வயது குழந்தை

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் இறந்து கிடந்த தாயின் சடலம் அருகே சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு 2 வயது குழந்தை 5 நாள்கள் உயிர்வாழ்ந்துள்ளது.
 
இந்தப் பரிதாபமான நிகழ்வு குறித்து அந்நாட்டு போலீஸார் கூறியது,

சிட்னியின் தென் மேற்குப் பகுதியில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வாக்கா நகரம். இங்கு ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்த பெண் சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்துள்ளார்.வீடு சில நாள்கள் பூட்டிக்கிடந்ததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டுக்காரர்கள் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் வீட்டுக்குள் இருந்து எவ்விதப் பதிலும் இல்லை. இதனால் அருகில் உள்ள பேராலயத்துக்கும், காவல்நிலையத்துக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அந்த இளம் பெண் வீட்டுக்குள் இறந்துகிடந்தார். அவரின் 2 வயது பெண் குழந்தை சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு தாயின் சடலத்துக்கு அருகில் அமர்ந்திருந்தது. 5 நாள்கள் அந்தக் குழந்தை சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தது தெரியவந்தது. இதனால் அந்தக் குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைந்து சோர்ந்து காணப்பட்டது.

இதையடுத்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தோம். சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமாக உள்ளது என்று போலீஸார்  தெரிவித்தனர்.
 

No comments

Powered by Blogger.