Header Ads



மாட்டுக்கறி விருந்து - உஸ்மானியா மாணவர்களிடையே மோதல்

இந்தியா - ஹைதராபாதில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகத்தின் உணவுப் பட்டியலில் மாட்டுக்கறி சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டுக்கறி திருவிழா நடத்த ஒரு பிரிவு மாணவர்கள் முடிவுசெய்தனர். இதற்கு மற்றொரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

மேலும் பல்வேறு வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

No comments

Powered by Blogger.