வடக்கில் மீளக்குடியேற சென்ற முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் - 135 கிராமங்கள் அழியும் நிலையில்
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச் சுத்திகரிப்பு என கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையில் 8 இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹஸ்புல்லா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எட்டு அரசியற் கட்சித் தலைவர்களது கவனத்துக்கு கொண்டுவந்தார்.
வட மாகாண முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்குமஅரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்க மளிப்பதற்காக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலேயே கலாநிதி ஹஸ்புல்லா இதனைச் சுட்டிக்காட்டினார்.
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் செவ்வாயன்று பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன சார்பில் அதன்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலாநிதி ஹஸ்புல்லா பவர் பொயின்ட்காட்சி விளக்கம் மூலம் வடமாகாண முஸ்லிம்களது தற்போதைய நிலை, அவர்கள் புத்தளத்தில் படும் துயரம் என்பன மூலம் எடுத்து விளக்கினார்.
யுத்தம் காரணமாக அகதிகளாக்கப்பட்ட தமிழர்களில் 95 % மானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். ஆனால, வட மாகாண முஸ்லிம்களின் மீற்குடியேற்றம் என்ன காரணமாகவே இடம் பெறுவதில்லை என்றார்.
வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களில் 20,000 குடும்பங்கள் தமது சொந்த மண்ணில் மீளக்குடியேற விருப்பம் தெரிவித்து அங்கு சென்றனர். ஆனால், அவர்களுக்குரிய வீடு, வாழ்வாதாரம் கலாசார சமூக வசதி, கல்வி வசதிகள் வழங்கப்படாமையால் 95% மானோர் திரும்பி வந்துள்ளனர் என்று குறிப்பிட்ட கலாநிதி ஹஸ்புல்லா இவர்கள் வாழ்ந்த 135 கிராமங்கள் அழிவுறும் நிலையிலே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
.jpg)
Post a Comment