அமைச்சர் ரிஷாத்திற்கு ஒரு தமிழ் சகோதரியின் உருக்கமான கடிதம்..!
வவுனியா பாரதிபுரத்தில் மீள்குடியேறி வசித்தபோது, காணியில் இருந்து பலவவந்தமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த விதவைத் தாயார் நிவாரணம், நீதி கோரி அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் பிரதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா அரசாங்க அதிபர், வவுனியா பிரதேச செயலாளர், கிராம அலுவலர், பிரதேச சபைத் தலைவர், பிரதேச சிவில் பாதுகாப்புக் குழு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணாகிய கணபதி புனிதவதி என்ற 48 வயது விதவைத் தாயார் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே,
தங்களுக்கு அறியத்தரும் விடயம் யாதெனில், 1988 ஆம் ஆண்டு வவுனியா பாரதிபுரத்தில் - புளிதறித்த புளியங்குளம் செல்லும் வீதியில் எனது கணவர் காடு வெட்டி துப்பரவு செய்த 2 ஏக்கர் காணியில் நாங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தோம். அப்போது, யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு நாங்கள் இடம் பெயர்ந்து, மன்னார் - மடுவுக்குச் சென்றிருந்தோம். பின்னர் 1993 ஆம் ஆண்டு மீண்டும் பாரதிபுரத்தி;ற்குத் திரும்பி வந்து எங்களது காணியில் குடியிருந்தோம். எனது கணவர் நாட் கூலிக்கு மேசன் வேலை செய்பவர். அவர் பகலில் வேலைக்குச் சென்றால் பின்னேரம்தான் வீடு திரும்புவார். அயல் வீடுகளிலும் ஆட்கள் இல்லை. அப்போது சண்டை நேரம்.
இராணுவத்தினர் வீடு வீடாகத் தேடுதல் நடத்துகையில் பாதுகாப்பற்ற நிலை காரணமாக மீண்டும் நாங்கள் இடம்பெயர்ந்து முருங்கனில் உள்ள மாளிகைப்பி;ட்டிக்குச் சென்று எமது உறவினர் ஒருவருடன் 13 வருடங்கள் வசித்து வந்தோம். அப்போது நானும் எனது கணவரும் கூலி வேலை செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தோம். அப்போது முருங்கனுக்கு ஒரு நாள் வேலைக்குச் சென்ற எனது கணவனின் கண்களில் சீமெந்து பட்டதனால், இரண்டு கண்களிலும் பார்வை அற்றுப் போனது. கண் தெரியாமல் இருந்து என்ன பயன் என்று மனமுடைந்த நிலையில் எனது கணவர் விஷம் குடித்து இறந்துவிட்டார்.
கணவனை இழந்த நிலையில் எனது 7 பிள்ளைகளுடன் நான் எனது காணிக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, எனது காணியை புளிதறித்தபுளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தமது மைதானத்திற்காக கம்பித்தூண் வேலி அமைத்து கேட்போட்டு, அடைத்து அடாத்தாகப் பிடித்து வைத்திருந்தனர். அருகில் குழாய் கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. எனக்கு எனது காணியைவிட வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் எனது காணியிலேயே கொட்டில் அமைத்து குடியிருந்து கூலி வேலை செய்து வந்தேன். இந்நிலையில் புளிதறித்த புளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கததினரும், பம்பைமடு பொலிசாரும் வாகனங்களில் வந்து என்னை காணியைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். குடியிருப்பதற்கு வேறு இடம் பார்த்துக்கொண்டு போகிறேன் எனக்கு ஒருநாள் தவணை தருமாறு அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். எனது கண்முன்னாலேயே எனது பிள்ளைகளை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, நாங்கள் குடியிருந்த கொட்டிலைப் பிடுங்கி எறிந்துவிட்டு எனது பாய் படுக்கை ஏனைய பொருட்கள் எல்லாவற்றையும் ரோட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்று விட்டனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு ரிசாட் பதியுதீன் அமைச்சர் போன் மூலம் கொட்டிலைப் பிடுங்கச் சொன்னார். ஆதலால்தான் நாங்கள் உங்களை வெளியேற்றுகிறோம் என்று கூறினார்கள்.
நானும் எனது பிள்ளைகளும் வீடு இல்லாமல் 10 நாட்கள் தெருவில் இருந்தோம். நான் எனது சொந்த இடத்திற்கு வந்தும் எனக்கு சொந்தக் காணியில்லாமல், மீள்குடியமர்வு உதவியும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.
தற்போது, காணியில்லாமல் பிரதேச செயலாளருக்கு அறிவித்தும் எந்த உதவியும் கிடைக்கப் பெறவில்லை. தற்போது எனது உறவினர் ஒருவரது காணிக்குப் பக்கத்தில் காடாக இருந்த காணியில் காடு வெட்டி துப்பரவு செய்து சிறு கொட்டில் அமைத்துள்ளேன். எனது மகன் உதவி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கல்வி கற்றும் தொடர்ந்து படிப்பதற்கு ஒரு வசதியும் இல்லை. மிகவும் துன்பப்படுகிறேன். வீடுவாசல், மலசலகூடம், கிணறு ஒன்றுமே இல்லை.
புளிதறித்தபுளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எனது காணிக்கு புனர்வாழ்வு அட்டை (வீட்டுத்திட்டம்) இருக்கின்றது. எனவே எனது நிலைமையைக் கவனத்திற்கொண்டு எனக்கு இதற்குரிய நடவடிக்கையை எடுத்து உதவுமாறு கேட்டுகொள்கிறேன். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதா இல்லை இதுபற்றி ஊடகங்களுக்குத் தெரிவிப்பதா என தெரியாத நிலையில் இருக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது விடயம் உண்மையாக இருப்பின் அமைச்சர் அவர்கள்
ReplyDeleteஉதவி செய்வது கட்டாயமாகும்.
அமைச்சர் அவர்கள் உதவி செய்த செய்தியை ஊடகங்கள் மூலம்
பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
இது விடயத்தில் தொண்டு நிறுவனங்களோ, அல்லது நலன் விரும்பிகளோ கூட உதவலாம்.
ஏதாவது ஒரு கணக்கை ஆரம்பித்து அதனை பகிரங்கமாக உதவி கேட்டு
அறிவிப்பதும் நல்லதே.
the almighty allah will ask the responsible persons one day...on that day, no friends, party members,....will not come with the responsible persons!!!!!
ReplyDeleteso, if you are a muslim responsible person, be ready to help this poor family as soon as possible!!
If not, not only the politician, whole society will be captured on one day...that's the day of judgement, isn't it??
Dear Shan,
ReplyDeleteIf some kind hearted person from her near by area started a small project to help her, insha allah, i am willing to contribute.
I cannot start as i am hundreds of kilometers away from the area.
Akram