இஸ்லாத்தை விரும்பியே ஏற்றுக்கொண்டடோம் - பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இந்துப் பெண்கள் சாட்சியம்
பாகிஸ்தானில் இந்துப் பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாகின்றனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் நிலையில், பாக்., கோர்ட்டில் ஆஜரான ஓர் இந்துப் பெண்,"தான் விரும்பித் தான் மதம் மாறியதாக' வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சமீபத்தில் பல இந்துப் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு, கட்டாயமாக மாற்றப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. அவர்களில் மூன்று பேரை நேரில் ஆஜர்படுத்தும்படி பாக்., சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், மூன்று பெண்களில் ஒருவரான லதா குமாரி என்பவர், கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தான் விரும்பியே மதம் மாறியதாகவும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை மணம் புரிந்ததாகவும், வாக்குமூலம் அளித்தார். தன்னைக் கடத்தியதாக தன் கணவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, ஆதாரமில்லாதது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இவ்வழக்கில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, குமாரியின் கணவருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். லதா குமாரியைப் போல, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட ரிங்கிள் குமாரி என்ற இளம்பெண்ணும், நேற்று முன்தினம் சிந்து ஐகோர்ட்டில் ஆஜராகி, தான் விரும்பியே மதம் மாறியதாகத் தெரிவித்தார்.

Post a Comment