Header Ads



வடமாகாணத்தில் ஆண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - யாழ்ப்பாணத்தில் 100 பெண்களுக்கு 90.4 ஆண்கள்

வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பெண்களுக்கு நிகரான வீதத்தில் ஆண்களின் சனத்தொகை காணப்படவில்லையென அரச புள்ளிவிவரவியல் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாணத்தின் புள்ளி விவரவியல் அறிக்கை, அரச புள்ளிவிவரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு மாகாணத்தில் 100 பெண்களுக்கு 92.9 என்ற விகிதத்திலேயே ஆண்கள் சனத்தொகை காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 100  பெண்களுக்கு 90.4 ஆண்களும், மன்னார் மாவட்டத்தில் 100 பெண்களுக்கு 100 ஆண்களும், வவுனியா மாவட்டத்தில் 100 பெண்களுக்கு 95 ஆண்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 பெண்களுக்கு 96 ஆண்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறு பெண்களுக்கு 95  ஆண்களும் என்ற விகிதத்தில் சனத்தொகை காணப்படுகின்றது.

இவ்வாறு ஆண்களின் தொகை வீழ்ச்சியடைந்து காணப்படுவதற்குக் காரணம், யுத்த நடவடிக்கைகளில் பெருமளவான ஆண்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளமையே என்றுள்ளது

No comments

Powered by Blogger.