Z புள்ளிகளில் எவ்வித தவறும் இல்லை - உயர்கல்வி அமைச்சு அறிவிப்பு
நிரல்படுத்தலை தயாரிக்கும்போது ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே நேற்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக வெளியிடப்பட்ட மாவட்ட மற்றும் தேசிய நிரல்படுத்தலை செல்லுபடியற்றதாக்குவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் Z புள்ளிகளில் எவ்வித தவறுகளும் இல்லையென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிக்கிறார்.
தற்போது தற்காலிகமாக வெளியிடப்பட்டுள்ள மாவட்ட ரீதியிலான உயர்தரப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெறுபேறுகள் மாத்திரமே திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ரீதியில் பெறுபேறுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் Z புள்ளிகள் மற்றும் பெறுபேறுகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment