கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திடீர் விபத்துக்குளான 580 பேர் அனுமதி
கடந்த இரு தினங்களில் திடீர் விபத்துக்குளான 580 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகன விபத்து, மோதல் சம்பவங்கள், மற்றும் பட்டாசு வெடிப்பு போன்ற சம்பவங்களால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளானவர்களில் 160 பேர் தொடரந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கடந்த இரு தின்களில் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில் பாதிக்கப்பட்ட 70 பேர் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நத்தார் பண்டிகையின் போதான திடீர் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்கு விசேட கவனம் செலுத்துமாறும் சுகாதார பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment