Header Ads



இலங்கை - அமெரிக்கா அணு தொழிநுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் - அமைச்சர்கள் எதிர்ப்பு

அணு தொழிநுட்ப பரிமாற்ற உத்தேச ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்துகொள்ளக்கூடாது என்று மூத்த அமைச்சர்கள்  சிலர் அரச உயர்மட்டத்திடம் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கடந்த வாரம் அமெரிக்கா நிராகரித்திருக்கும் சூழ்நிலையிலேயே அமைச்சர்களின் இந்த எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கின்றது.

முன்னதாக, இந்த அணு தொழிநுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பில் மின்சக்தி, எரிபொருள் துறை அமைச் சர் சம்பிக்க ரணவக்க, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பலசுற்றுப் பேச்சுகளை நடத்தி இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கை விடயங்களில் அமெரிக்கா பின்பற்றிவரும் கடும்போக்கு குறித்து அதிருப்தியடைந்துள்ள மூத்த அமைச்சர்கள் சிலர் அமெரிக்காவுடன் இப்படியான ஒப்பந்தத்தை உடனடியாக செய்யக்கூடாதென வலியுறுத் தியுள்ளனர்.

"அணு தொழிநுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தை இலங்கையுடன் செய்துகொள்வதில் அமெரிக்காவுக்கு உள்நோக்கம் ஏதாவது இருக்கக்கூடும். அதன் தற்போதைய செயற்பாடுகள் அதனையே காட்டுகின்றன'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.இதேவேளை, அணு தொழிநுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்வது தொடர்பிலான யோசனையை அரசு தற்போது மீள்பரிசீலனை செய்துவருவதாக அறியமுடிகின்றது
                                                                                                                                                   

No comments

Powered by Blogger.