Header Ads



GOOD BYE அநுர எதிரிசிங்க

2012 ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக டபிள்யு.எம்.என்.ஜெ.புஸ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

எமது குறிப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்கவுக்கும்  எனக்கும் இடையிலான தொடர்பு மிகவும் சிநேகபூர்வமானது. ஒரு தொழில்சார் ஊடகவிலாளன் என்றவகையில் அவரை நேடியாக பலதடவை சந்தித்துள்ளேன். முஸ்லிம், தமிழ் விவகாரங்கள் தொடர்பில் அடிக்கடி என்னுடன் அலசும் அவர், எனது பார்வையில் கிஞ்சித்தும் இனவாதமற்ற ஒரு நல்ல மனிதர். சில தகவல்கள் அல்லது செய்திகள் அவரிடம் இருப்பின் எனது கையடக்க தொலைபேசிக்கே அழைப்பெடுத்து கூறுவார்.

இவற்றுக்கு அப்பால் ஏதேனும் அவசர விளக்கம் தேவைப்படுமிடத்து அவருடைய வீட்டிற்கே அழைப்பெடுத்து அவரிடம் விளக்கம் கோரவும் அனுமதியளித்திருந்தார்.

எனக்கும், அவருக்கும் இருந்த நல்லுறவு மூலம் பல சிறப்புச் செய்திகளை ஏனைய ஊடகங்களையும் முந்திக்கொண்டு நான் பணியாற்றிய ஊடகம் பிரசுரிக்ககூடியதாக இருந்தது. பத்தரமுல்லை பக்கம் சென்றால் பரீட்சை ஆணையாளரை சந்திக்காமல் வருவதில்லை. காரணம் பரீட்சை ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றிய பியோன் போட்டுத்தரும் அந்த டீ அவ்வளவு சுவைமிக்கது.

ஏதோசில காரணங்களுக்காக தனது பதயிலிருந்து அகற்றப்படும் அநுர எதிரிசிங்க என்ற தனிநபரின் நல் மனதிற்காக அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.அவருடன் பழகிய அந்த நல்ல ஞாபகங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கும்..!

இங்கு
யாழ் முஸ்லிம் வலைத்தளம்

No comments

Powered by Blogger.