பேஸ்புக் தொடர்பில் இலங்கையில் தினமும் முறைப்பாடுகள்
பேஸ் புக் எனப்படும் முகப்புத்தகத்தில் மற்றைய நபர்களின் கணக்குகளில் அநாவசியமாக வெளி நபர்கள் பிரவேசிப்பது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் செய்யப்படுவதாக அந்தப் பிரிவின் முகப்புத்தக பகுதி பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹண பல்லியகுரு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போலியான முகப்புத்தக கணக்குகள் குறித்த முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இதுவரை முகப்புத்தக மோசடி தொடர்பில் 1750 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Post a Comment