Z புள்ளி விவகாரம் மேலும் சிக்கலாகும் சாத்தியம்
இவ்வருட க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இஸட் புள்ளி தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நாடியுள்ளது.
இவ்வருடம் பழைய பாடத்திட்டம், மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கான பரீட்சைகள் நடைபெற்றன. இவற்றுக்கு பொதுவான இஸட்புள்ளி முறைமையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயாரித்துள்ளதாக அந்த ஆணைக்குழு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த பொதுவான இஸட் புள்ளி முறைமைக்கு எதிராக மாணவர்கள் வழக்குத் தொடரக்கூடும் என்பதால் சட்டமா அதிபரின் ஆலோசனையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நாடியுள்ளதாக மேற்படி அதிகாரி கூறினார்.
இஸட் புள்ளி விவகாரம் காரணமாக இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment