Header Ads



யாழ்ப்பாணத்தில் காதலர்களுக்கு விடுதி கொடுத்தால் கைது - இது பொலிஸ் அறிவிப்பு

யாழில் விடுதி நடத்துபவர்கள் கலாச்சரத்தை சீரழிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் காதல் ஜோடிகளாக வருபவர்களுக்கு விடுதி கொடுப்பவர்கள் கைது செய்யப்படுவர்கள் எனவும் யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரி.இந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் விடுதிகளை பதிவு செய்வது தெடர்பிலான முக்கிய கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழின் கலாசாரத்தை சீர்படுத்தும் நோக்குடன் சில இறுக்கமான நடைமுறைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம். தமிழ் பண்பாட்டைப் பேணி எமது எதிர்கால சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்கள் மீதும் இருக்கிறது.

யாழில் விபச்சாரம் நடைபெறும் விடுதிகள் இருந்தால் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக வாருங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். யாழில் சில பிரதேசங்களில் விடுதிகள் விபச்சாரத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக எமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

இருந்தும் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம் என நீங்கள் நினைக்க வேண்டாம். திடிரென விடுதிகளுக்குள் நாங்கள் இறங்குவோம் என்றார்.

No comments

Powered by Blogger.