வடமாகாண சமூக பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் மாநாடு
வட மாகாணத்தில் தற்போது அதிகதித்து செல்லும் சமூகப் பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றுக்கு காலக்கிரமத்தோடு தீர்வு காண்பது தொடர்பான விசேட மாநாடு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தலைமையில் வியாழக்கிழமை யாழ். நூலகத்தில் நடைபெற்றது.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடமாகாண சமூகத்தின் தற்கால நிலை மிகவும் சமூகப்பிரச்சனைகள் நிறைந்தவையாகக் காணப்படுகிறது. அவற்றைத் திர்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவ விஜயசிங்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார், யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா, வடமாகாண ஆளுநரின் செயலளர் வி.விஜயலட்சுமி மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment