'விசரல் லிஸ்மனைஸிஸ்' - ஆட்கொல்லி நோய் குறித்து எச்சரிக்கை
விசரல் லிஸ்மனைஸிஸ் என்னும் நோய் அண்மைக் காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவதாக தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நோய் அநுராதபுரத்தில் தீவிரமாக பரவும் அபாயம் நிலவுவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சருமத்திலும் , உடலின் ஈரப்பதனான பகுதிகளிலும் கடும் காயங்களை இந்த நோய் தோற்றுவிக்கும் எனவும் , இரப்பை மற்றும் மூட்டுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஆட்கொல்லி நோயாகவும் , சரும நோயாகவும் மூன்று விதமாக இந்த நோய் அடையாளப்படுத்தப்படுகின்றது.

Post a Comment