கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் சாத்தியமற்றது என்கிறார் தமிழ் எம்.பி.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு அல்லது தனித்து ஆட்சியமைத்து முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறுவது என்பது சாத்தியமற்ற விடயமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.
சிலவேளை கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடவும் கூடும். முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சு நடத்தி வியுகங்களை வகுக்கவும்கூடும்.
முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெறுவதே தமது இலட்சியமென அறிவித்திருக்கிற போதிலும், இதுதொடர்பில் முஸ்லிம் மக்ளிடத்தில் வேறுபட்ட அபிப்பிராயங்களே காணப்படுவவை அவதானிக்கமுடியுமாக உள்ளதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment