Header Ads



இலங்கையர்களுக்கு சீனியும், உப்பும் ஆபத்து


இலங்கையில் உப்பு மற்றும் சீனி என்பன அதிகளவில் உட்கொள்வதன் காரணமாக இனங் காண முடியாத நோய்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித மஹிபால வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொது மக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இலங்கையில், நூற்றுக்கு 65 சத வீதமான மரணங்கள், இனம் காணப்படாத நோயினால் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, புகைபிடித்தல், மதுபாவனை மற்றும் மனநோய் என்பனவை காரணமாகவும் மரணங்கள் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக உணவு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.