Header Ads



A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவி சாதனை (படம் இணைப்பு)


க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில 3 ஏ பெற்று முதலிடம் இடத்தை சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதா பெற்றுள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர் விபரங்கள் அறியக்கிடைத்துள்ளது.

இதன் பிரகாரம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவரான கமலக்கண்ணன் கமலவாசன்  தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

வர்த்தகப் பிரிவில் தெபருவௌ தேசிய பாடசாலையின் இசாரா தில்ஹானி கமகே என்ற மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் ருவன் பத்திரன என்ற மாணவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

கலைப்பிரிவில் கேகாலை சென் ஜோன்ஸ் மகளிர் வித்தியாலய மாணவி சஜின்தனி சௌசல்யா சேனாநாயக்க முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். 


 

2 comments:

  1. BEST OF LUCK SISTER MEENDUM KALVIYIL MUNNERA EN WISHES

    ReplyDelete
  2. இது போன்ற பெறு பெறுகளை மீண்டும் மீண்டும் பெற்று பதவிகளில் உயர்ந்து சமூகத்திற்காக பல நன்மையான செயல்கள் புரிந்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை நீயும் அடைந்து உமது குடும்பத்தினரும் அடைய வாழ்த்துகிறேன் ,

    ReplyDelete

Powered by Blogger.