கண்டியில் பொலிஸ் பாதுகாப்புடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்
கண்டி பிலிமதலாவ பகுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீ்ட்சைக்கு தோற்றுவதற்குச் சென்ற மாணவரொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு மாணவர் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்வம் பாடசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலை நடத்திய மற்றைய மாணவன் தப்பிச்சென்ற வேளையில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு காயமடைந்துள்ளார்.
காயமமடைந்த இரு மாணவர்களும் கடுகண்ணாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், பொலிஸாரின் பாதுகாப்புடன் இரு மாணவர்களுக்கும் பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment