மேற்குலகின் பொருளாதார தடை - ஈரான் பாதிப்பை உணர்கிறது
ஈரான் பொருளாதாரத் தடையின் பாதிப்பினை சிறிது சிறிதாக உணரத்தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் பிரதி எண்ணெய் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் பொருளாதாரத்தடையினால் ஈரான் மீதான வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
குறிப்பாக மசகு எண்ணெய் உற்பத்தி மீதான முதலீடுகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தியும் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. ஆரம்பத்தில் பொருளாதாரத் தடைகளால் பாதிப்பேதும் இல்லையெனவும், தாம் வழமை போல் உறுதியாகவுள்ளதாகவும் ஈரான் தெரிவித்து வந்தது.
ஆனாலும் தம்மால் போலியாக நடிக்க முடியாதெனவும், பொருளாதாரம் சிறிது சிறிதாக வீழ்ச்சி கண்டு வருவதாகவும் அவ் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரானின் மத்திய வங்கியும் தமது பொருளாதார நிலை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலந்து நாட்டின் இயற்கை எரிவாயு நிறுவனமொன்றுடனான ஈரானின் ஒப்பந்தம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகக் குற்றஞ்சாட்டியே மேற்குலக நாடுகள் அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தககது.

Post a Comment