Header Ads



விபச்சாரி இன்றேல் ஆண்கள் மனநோயாளியாகிவிடுவர் - சிங்கள நடிகை தெரிவிப்பு

பாலியல் தொழிலாளர்களின் சேவை கிடைக்கப் பெறாவிட்டால் இலங்கையில் ஆண்கள் தவறான வழிக்கு கொண்டு நடத்தப்படுவார்கள் என்றும் ஒரு வேளை மன நோயால்கூட பீடிக்கப்படுவார்கள் என்றும் பகிரங்கமாக அபிப்பிராயம் தெரிவித்து உள்ளார் தென்னிலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருத்தியும் அழகியுமான நதீஷா ஹேம்மாலி.

இவர் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி சேவை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பிரபல தொகுப்பாளர்கள் இருவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குகையில் மேற்கண்டவாறு கூறி இருந்தார்.

பாலியல் தொழிலாளர்கள் இல்லாத இலங்கையில் ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுவர், ஒருவேளை மன நோயாளிகள் ஆகி விடுவர் என்றார். தொலைக்காட்சி நடிகைகளுக்கு எதிராக விரல்களை உயர்த்த வேண்டாம், சில நடிகைகள் தவறு செய்கின்றனர் , ஆனால் அநேகர் அப்படியானவர்கள் அல்லர் என்றார்.

No comments

Powered by Blogger.