க.பொ.த. சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 28 ஆம் திகதி ஆரம்பம்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இம்மாதம் 28ஆம் திகதி தொடர்க்கம் 2012 ஜனவரி மாதம் 03ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வேண்டி நாடளாவிய ரீதியில் சுமார் 52 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சை திணைக்கள வரலாற்றில் முதல் முறையாக கிளிநொச்சி மாவட்டத்தில் விடைத்தாள்கள் திருத்தும் நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு இவ்விடைத்தாள்கள் திருத்தும் பணி இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 700 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவுபெறும். இப்பரீட்சைக்கு 3 இலட்சத்து 10 ஆயிரம் பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 5 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment