Header Ads



இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி (GDP), இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் எட்டு புள்ளி நான்கு சதவீதம் என்ற அளவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவே கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், எட்டு சதவீதம் என குறைவாகக் காணப்பட்டதுடன் இந்த ஆண்டின் முதலாம், இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளில் முறையே 7.9%, 8.2%, 8.4% என தொடர்ச்சியான அதிகரித்த வேகத்தில் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டின் மூன்றவாது காலாண்டில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்று துறைகளும் முறையே 6.2%, 10.8%, 7.8% என்ற அளவினால் வளர்ச்சி கண்டுள்ளன. எனினும், விவசாயத் துறையில் எதிர்பார்த்த வளர்ச்சியினை பதிவு செய்ய முடியவில்லை.

குறிப்பாக நெல், தேயிலை மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர் உற்பத்திகள் முறையே 12.4%, 6.9%, 7.9% என்ற அளவினால் வீழ்ச்சி கண்டுள்ளன. பாதகமான காலநிலையே இதற்க்கு காரணம் என புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு முழுவதுமான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி (GDP), எட்டு சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிமால் கப்ரல் அண்மையில் தெரிவித்திருத்தார்.  இதேவேளை, இலங்கை பொருளாதாரம் கடந்த 2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் முறையே 6%, 3.5%, மற்றும் 8% என்ற அளவில் வளர்ச்சியினை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.