Header Ads



வபாத்தான உறவுகளுக்காக பிரார்த்திப்போம்..!!

கடள்கோள் அனர்த்தம் எனப்படும் சுனாமி ஏற்பட்டு பலவருடங்கள் சென்றுவிட்ட போதும், அதன் நினைவலைகள் இன்றும் எம்முள்ளங்களில் ஒட்டியிருக்கிறது. இந்நிலையில் கடந்தகால சுனாமி அனர்த்தத்தில் காணாமல்போன மற்றும் வபாத்தான எமது உறவுகளுக்காக அல்லாஹ்விடம் இருகரமேந்துவோம்.

அனர்த்தங்களின் போது உயிரிழந்தவர்களுக்காக  திங்கட்கிழமை காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேர மௌனப் பிரார்த்தனையினை பொதுமக்கள் அனைவரும் மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுள்ளது.

நாடளாவியரீதியில் அனர்த்தங்களின் போது உயிரிழந்தவர்களுக்காக  இரண்டு நிமிட நேரம் பிரார்த்தனை செய்யப்படவுள்ளது. எனவே இந்தப் பிரார்த்தனையில்  சகல மக்களையும் பங்கெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தியும், அலுவலகங்களில் பணிபுரிவோர் தமது பணிகளை இந்த இரண்டு நிமிடத்திலும் நிறுத்திவிட்டு, எழுந்து நின்று மௌனப் பிரார்த்தனையில் பங்கெடுத்து அனர்த்தங்களின் போது உயிரிழந்தோரை நினைவுகூருமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.
 

No comments

Powered by Blogger.