ஏ.எல். பரீட்சை முடிவுகள் இவ்வாரம் வெளியாகும் - பரீட்சை ஆணையாளர் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த வாரத்தில் வெளியிட முடியும் என தாம் நம்புவதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த முறை உயர்தர பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணம் இசட் வெட்டு புள்ளியை நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய மற்றும் பழைய பாடதிட்டங்களின் அடிப்படையில் இந்த முறை பரீட்சைகள் இடம்பெற்றமையினால் குறித்த நிர்ணயங்களை இலகுவில் மேற்கொள்ள முடியாதுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடைவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.
இந்தநிலையில், இசட் வெட்டுபுள்ளி முறைமை தொடர்பாக பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் நிர்ணய சூத்திரத்தின் நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment