Header Ads



க.பொ.த. உயர்தர வர்த்தக பாடத்தில் திருத்தம்

கல்விப் பொதுத்தராதர உயர்தர வணிகப் பிரிவிற்கான பாடங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய வணிகப் பிரிவிலுள்ள கணக்கியல், பொருளியல், வர்த்தகம் ஆகிய பாடங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பாடங்களுக்குரிய பாடவிதானங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்களும் பெற்றோரும் பொதுமக்களும் விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனத்தின் தலைமையில் திருத்தியமைக்கப்பட்ட பாடவிதானங்கள் 2012 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் புதிய பாடவிதானத்திற்கு அமைய பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்காகவும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கல்வி அமைச்சின் கையொப்பத்துடன் மாகாண கல்விச் செயலாளர், பணிப்பாளர், அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் இந்த அறிவித்தலின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.