Header Ads



ஓநாயுடன் போராடி குடும்பத்தை காப்பாற்றிய 12 வயது சிறுவன் - மதீனாவில் சம்பவம்

12 வயதே நிரம்பிய சிறுவன் தனியாளாக ஓநாயைக் கொன்று வீழ்த்தி, தனது குடும்பத்தினரைக் காப்பாற்றி இருக்கிறான்.

அப்துல் அஸீஸ் என்ற பெயருடைய அச்சிறுவன் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா மாநகரத்தின் புறநகரில் தனது பெற்றோர் சகோதர சகோதரிகளுடன் தகரக்கதவுகளும் சுவர்களும் கொண்ட ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறான்.

கடந்த வெள்ளியன்று அதிகாலை நான்கு மணியளவில் தன் தாயாரின் அலறல் சப்தம் கேட்டு கண்விழித்த அப்துல் அஸீஸ், பாய்வதற்குத் தயாராக இருந்த ஓர் ஓநாயைக் கண்டான். சற்றும் அச்சமின்றி, வெறுங்கையுடனே அதனுடன் மோதிய அப்துல் அஸீஸை கைகள், கால்கள், முதுகுப்புறம் என்று ஓநாய் கடித்துவைத்தது. இருந்தாலும் ஒருவழியாக அந்த ஓநாயை வீழ்த்திய அப்துல் அஸீஸ், பின்னர் ஒரு கல்லால் அதனைத் தாக்கிக் கொன்றான். தன்னுடைய சிறுவயது சகோதர சகோதரிகளை அச்சிறுவன் இவ்விதமாகக் காப்பாற்றியுள்ளான்.

காயமடைந்த அப்துல் அஸீஸ், உடனடியாக அருகிலுள்ள கைபர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிட்சை பெற்று வருகிறான். உரிய விஷமுறிவு மருத்துவச்சிகிச்சை அப்துல் அஸீஸ் பெறும் பொருட்டு, அவனுடைய தகப்பனார்,  அந்த ஓநாயின் உடலை  மருத்துவர்களிடம் காண்பிப்பதற்காக எடுத்துவந்திருந்தார்.

சிறுவன் அப்துல் அஸீஸின் தைரியமும், வீரமும் அவ்வூர்வாசிகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.

No comments

Powered by Blogger.