பிரிட்டனில் நிரந்தர வசிப்பிடம் இல்லையேல் குறைந்த ஆயுட்காலம் - ஆய்வில் தகவல்
இங்கிலாந்தில் நிரந்தர இருப்பிடங்களற்றவர்கள் அந்த நாட்டின் சராசரி ஆயுட்காலத்தை விட 30 வருடங்கள் முன்கூட்டியே உயிரிழக்கின்றமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து மக்களின் சராசரி ஆயுட்காலம் 77 வயதாக காணப்பட்டாலும் நிரந்தர வீடு அற்றவர்கள் அநேகமாக 47 வயதில் உயிரிழக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்களின் மரணத்திற்கான காரணமாக போதைப் பொருள் பாவனை அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிரந்தர இருப்பிடங்களற்றவர்களுக்கு உதவிகளை வழங்க 20 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்த ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment