Header Ads



சுயநிர்ணயத்துடன் தீர்வு வழங்காவிடின் ஆள்வதற்காக போராடுவோம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி அதன்மூலம் அடிபணியச் செய்து ஒரு அரசியல் தீர்வை திணிப்பதற்கு ஜனாதிபதி முயல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் நாடு முழுவதையும் சிங்கள, பௌத்த, இராணுவமயமாக்குவதற்கு முயற்சிக்கின்றது. அச்சுறுத்தி அடிபணியச் செய்து தமிழ் மக்கள் விரும்பாத அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அவரின் அந்த திட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருபோதும் தலை வணங்காது.

முழு நாட்டையும் ஆள வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்கவில்லை. எமது பிரதேசத்தில் சுயநிர்ணயத்துடன் வாழவே விரும்புகின்றனர். அவ்வாறான அடிப்படையில் தீர்வு வழங்காவிடின் நாம் ஆள்வதற்காக போராடுவோம். என்று அவர் உரையாற்றியுள்ளோம்.

No comments

Powered by Blogger.