Header Ads



கண்டி மயானத்தில் புதைக்கப்பட்ட 163 பிரித்தானியர்களை தோண்டியெடுக்க நடவடிக்கை


இலங்கையில் கண்டியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு இருக்கின்ற பிரித்தானிய வீரர்களின் சமாதிகள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.

மத்திய மாகாண ஆளுனர் திக்கிரி கொப்பேகடுவ இதற்கான நடவடிக்கைகளில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார்.

கண்டி தலதா மாளிகையின் நில மட்டத்துக்கும் மேலாக சமாதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றமை தவறானது என்று காரணம் கூறுகின்றார்.

காலனித்துவ ஆட்சியின்போது பிரித்தானிய வீர்ர்கள் 163 பேரின் உடல்கள் 1817 ஆம் ஆண்டு இம்மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவுத் தூபிகள் எழுப்ப்ப்பட்டன.

இலங்கையில் தேயிலைச் செய்கையை அறிமுகப்படுத்தியவர்களான John Doily , James Tyler  ஆகியோரின் உடல்களும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டன.

No comments

Powered by Blogger.