பாவம் பரீட்சை ஆணையாளர்..!
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்கவிற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படாததால் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெறுபெறுகள் தாமதமடைவதால் மாணவர்களின் எதிர்கால நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் விரைவில் மனுவை விசாரித்து மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment