பரீட்சை முடிவுகளில் குழப்பம் - பேறுபேறுகள் நிறுத்திவைக்கும் சாத்தியம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் மாவட்ட வரிசை நிலையிலும் அகில இலங்கை வரிசை நிலையிலும் பிழைகள் காணப்படுகின்றன. தற்போது வெளியிடப்பட்ட பெறுபேறுகளை நிறுத்திவைக்கும் சாத்தியம் காணப்படுவதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இஸட் புள்ளிவிவகாரத்தில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லையெனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கடந்த 9ம் திகதி தொடக்கம் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் கடந்த 24ம் திகதி கல்வி அதிகாரிகளை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வழங்கிய ஆலோசனையின்படி 25ம் திகதி காலை 10 மணிக்கு பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.
ஆனால் நேற்று (25) நேற்று காலை குறிப்பிட்ட நேரத்திற்கு பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை. பின்னர் இரவு 10.30 மணிக்குப் பின்னரே பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளிடப்பட்டன.
இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சை முடிவுகளில் சிக்கல்கள் காணப்படுவதால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்

Post a Comment