மொக்குத்தனமான அறிக்கைவிட்டு முஸ்லிம்களை காட்டிக்கொடுக்காதீர்கள் - ஹிஸ்புல்லாஹ்
கிழக்கில் ஆயுதக் குழுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை இது சுத்தமான பொய் ஆளுநர் அலவி மௌலானாவின் அறிக்கையை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். மொக்குத் தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கை பற்றி எதுவும் அறியாத அவர் உளறிகொட்டிக் கொண்டுடிருக்கிறார். கொழுப்பிலிருந்து அறிக்கை விட்டு எமது மக்களைப் பிரச்சினைகளுக்கு உள்ளாக்க வேண்டாம். உங்கள் வேலையை பார்த்துகொண்டு நீங்கள் இருப்பதே உங்களுக்குச் சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மக்கள் பிரச்சினை இன்றி நிம்மதியாக வாழ்கிறார்கள் ஆயுதகுழுக்கள் என்ற போர்வையில் மீண்டும் அந்த மக்களை பிரச்சினைக்குள் சிக்க வைக்க வேண்டாம் எமது மக்களின் பிரச்சினைகளை நாமே பார்த்துகொள்வோம் . அதனை தீர்துகொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடே என்ற ஆங்கில இணையத்திற்கு மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான கிழக்கு மாகாணத்தில் செய்றபடும் வஹாபிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கையிலேயே ஹிஸ்புல்லா இவ்வாறு கூறியுள்ளார்.
Post a Comment