சட்டவிரோத மின்சாரம் தாக்கி குடும்பமே பலி
மத்துரட்ட - ஒக்கந்தவெல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் மூவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 09.25 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வீட்டுக்கு அருகில் 25 மீற்றர் தொலைவில் இருந்த அநாவசிய மின் இணைப்பு கம்பியில் சிக்குண்டே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஓரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (44), தாய் (33) மற்றும் ஆண் குழந்தை (03) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Post a Comment