இலங்கை - பலஸ்தீன் இடையே உடன்படிக்கை
பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் மல்கி இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் இவர், செவ்வாய்க்கிழமை வரை தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் உள்ளிட்ட பலருடன் பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதன்போது, அரசியல் ஆலோசனை தொடர்பிலான இராஜதந்திர உடன்படிக்கையொன்று இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Post a Comment