Header Ads



இலங்கைக்கு 20 ஆம் திகதி வரும் அப்துல்கலாம் யாழ்ப்பாணத்தில் 3 நாள் தங்கியிருப்பார்


இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம்  திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் விசேட உரையாற்றவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. யாழில் மூன்று நாட்கள் தங்கவுள்ள இவர், யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களையும் சந்திக்கவுள்ளதுடன் யாழில் நடைபெறவுள்ள இந்திய கலை கலாசார நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவுதாக யாழ்.இந்தியத் துனைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.