மன்னாரில் தோண்டப்பட்ட மூன்றாவது கிணற்றில் எண்ணெய் வளம் இல்லையாம்
மன்னார் கடற்படுக்கையில் கெய்ன் இந்தியா நிறுவனம் தோண்டிய மூன்றாவது எண்ணெய்க் கிணறில் எண்ணெய் வளமோ, இயற்கை வாயுவோ கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. CLPL-Dorado North 1-82K/1 என்று பெயரிடப்பட்ட இந்த மூன்றாவது கிணற்றைத் துளையிடும் பணிகளில் கெய்ன் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஆனால் அந்தக் கிணற்றில் எதுவும் கிடைக்காததால், ஏமாற்றமடைந்த கெய்ன் இந்தியா நிறுவனம் துளையிடும் பணிகளைக் கைவிட்டுள்ளது. ஏற்கனவே துளையிடப்பட்ட இரண்டு கிணறுகளிலும் இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.
அதனால், இரண்டாம் கட்டமாக அவற்றை மேலும் ஆழமாகத் துளையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெய் வளம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் கடற்படுக்கையில் இலட்சக்கணக்கான பீப்பாய் எண்ணெய் வளம் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது
Post a Comment