Header Ads



ஓட்டமாவடியில் 64 வயது வயோதிப முஸ்லிம் பெண் படுகொலை


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் ​நேற்று (26) திங்கட்கிழமை இரவு வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டு வளவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

ஓட்டமாவடி - 01 குறிச்சி, புஹாரி மௌளவி வீதியை சேர்ந்த வெள்ளக்குட்டி வெள்ளையும்மா வயது (64) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். 

அவரின் கணவர் வியாபார நடவடிக்கைகளுக்காக வெளியில் சென்றிருந்ததாகவும் சம்பவம் நடைபெற்ற சமயம் அவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.