மருதானையில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை - 4 பேர் காயம்
மருதானை டி.பி.ஜயா மாவத்தையில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் நேற்றிரவு 9.40 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோதலில் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சிராஸ் என்ற இளைஞரே பலியாகியுள்ளார். குறித்த இளைஞன் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மோதலில் காயமடைந்த மேலும் நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment