வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேற உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சக்திகள் தடை
வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களாக பல்லாண்டு காலம் துன்பம் அனுபவித்துவரும் முஸ்லிம் மக்களின் இன்றைய அவல நிலை குறித்து மனவேதனைப்படுகிறேன். அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த கிராமங்களில் மற்றும் இருப்பிடங்களில் மீள் குடியேற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு சில அரசியல் சக்திகளும் வெளிநாட்டு சக்திகள் சிலவும் முட்டுக்கட்டைகளை போட்டு வருகின்றன என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு 25 சிங்கள குடும்பங்கள் வடபகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கவலை கொண்டுள்ளேன். எமது அரசாங்கம் மூன்றரை இலட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் இப்போது மீள்குடியமர்த்தியுள்ளது.
என்றாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விதம் சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்ட மைக்கு கண்டனம் தெரிவிப்பது போன்ற தவறான செயற்பாடுகளினால் தான் இன்று நாட்டில் இனப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்க முடியாத நிலை தேன்றியிருப்பதாக அமைச்சர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் எதிர்க்கவில்லை. வன்னியில் 18 கிராமங்களில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு மின்சார விநியோகம் கொடுக்கும் அரசாங்கத்தின் முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருவது வேதனை அளிக்கிறதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment