A/L பரீட்சை முடிவுகளை தடைசெய்ய முடியாது - ஆணையாளர் திட்டவட்டமாக அறிவிப்பு
உயர்தரப் பெறுபேறுகளை ஒருபோதும் தடை செய்ய முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிலை கணிப்பீட்டில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு தற்போது முற்றுமுழுதாக சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய ரீதியிலான நிலைப்படுத்தலில் தவறுகள் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை பெறுபேறு தவறு என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாகக்கூறிய அநுர எதிரிசிங்க, தவறான சுட்டெண்களை வழங்கி தவறான பெறுபேறுகளைப் பெற்றால் அதற்கு தன்னால் பொறுப்புக்கூற முடியாது எனவும் கூறியுள்ளார்.
எனினும் ´பாத்திரக் கடைக்குள் மாடு நுழைந்தது போல´ சில ஊடகங்கள் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து சமூகத்தில் ஸத்திரமற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

Post a Comment